Home > Departments > தமிழ்த்துறை
கண்ணோட்டம்
செயல்பாடுகள்
ஆசிரியர்
நோக்கங்கள்
சாதனைகள்
செய்திமடல்

தமிழ்த்துறை ஒரு கண்ணோட்டம் (Overview)

விவேகானந்தா கல்வி நிறுவனம் 1992 – ஆம் ஆண்டு முதல் கல்விச் சேவையை மிகச் சிறப்பான முறையில் துவங்கி வரும் மிகப்பெரிய பெண்கள் நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ்த்துறை தொடங்கப்பட்டது. 2019 ஆண்டு முதல் முதுகலைத் தமிழிலக்கியம் தொடங்கப்பட்டு இன்றுவரை தமிழ்த்துறையானது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவியரின் மீதும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. ஆராய்ச்சி முறையிலான கற்பித்தலின் மூலம் மாணவிகளை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்குத் தயார்படுத்தும் நோக்கில் அனுபவம் மற்றும் தனித்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசுத்தேர்வில் வெற்றிபெறுவதற்கான கற்றல் கற்பித்தல் முறைகள். பல்நோக்கு நவீன வகுப்பறைகள் கொண்டதாக தமிழ்த்துறை விளங்குகிறது.

பாடப்பிரிவு

  • இளங்களைத் தமிழிலக்கியம் (B.A. Tamil) மூன்று ஆண்டுகள்
  • முதுகலைத் தழிழிலக்கியம் (M.A. Tamil) இரண்டு ஆண்டுகள்

பார்வை (Vision)

தொழில்நுட்பமும் சவால்களும் நிறைந்து இருக்கும் இக்கால கட்டத்தில் பெண்கள் மொழி அறிவுடன் விளங்குவதையும், பெண்களின் கற்றல் மற்றும் ஆராய்ச்சி அறிவை விரிவு செய்வதையும், தனித்தன்மையுடன் பெண்கள் சிறந்து விளங்குவதை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்த்துறை திறம்பட கட்டமைக்கப்பட்டுள்ளது.

பணி (Mission)

உலகின் தொன்மையான மொழி நம் தாய்மொழி தமிழ்மொழி. தமிழ் மொழியின் வாயிலாக பெண்கள் சிறந்த முறையில் தங்கள் அறிவினை வளர்த்துக்கொண்டு புதுமையான வகையில் செயல்திறனை வளர்த்துக்கொண்டு ஆய்வுத்திறன்களை மேம்படுத்தியும் தமிழ் மொழியின் பெருமைகளை இன்றைய பெண்கள் உலகிற்கு எடுத்துச் செல்லும் விதமாக தமிழ்த்துறை செயல்பட்டு வருகிறது.

பயன் - பணிவாய்ப்பு

  • பதிப்புத்துறையில். இந்து அறநிலைத்துறையில் வேலை வாய்ப்பிற்கான பயிற்சி.
  • எல்லாவிதமான அரசுப்போட்டித் தேர்வுகளிலும் தமிழே பிரதானமாக இடம் பெற்றுள்ளது.
  • TET, TRB, SLET, NET, TNPSE - போன்ற துறைசார் பள்ளி. கல்லூரி அரசு ஆசிரியர் பணிகளில் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு.
  • செய்தி வாசிப்பு> நிகழ்ச்சித் தொகுப்பு போன்ற வாணொலி> தொலைக்காட்சி, ஊடகப் பணிவாய்ப்பு.
  • செய்தித்தாள் துறையில் எழுத்தாளர் மற்றும் பதிப்புத்துறை பணிவாய்ப்பு.
  • அரசு எழுத்தர் மற்றும் தட்டச்சுப் பணிவாய்ப்பு.